பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


25.11.2024

48. துன்பங்களில் பின்வாங்காத, உறுதியான தீர்மானம் வேண்டும்!

  வாழ்க்கை பயணத்தில், தேவனுடைய கரத்தில் என்னை அர்ப்பணித்து ஓர் உறுதியான முடிவு எடுப்பது அவசியம்! அது என்னவெனில் “ஒன்றை முடிப்பதற்கென்று, ஒரு அடிகூட இனி நானாக எடுத்து வைக்க மாட்டேன்! அல்லது, நீர் என் ஜீவியத்தில் செயல்படுத்தும் செயல்களுக்கு இடையூறு செய்யவும் மாட்டேன்! இனி நான் செய்யப்போவதெல்லாம், நீர் நடத்துகிற பாதையில் நானும் நடந்து உம்மை மகிழச் செய்வது ஒன்று மாத்திரமே!” என மனநிறைவோடு எடுக்கும் தீர்மான முடிவு எடுப்பதாகும்! இக்காலத்தில் பல்வேறு நூதனமான சொப்பனங்கள் தோன்றியதாக சில பக்தர்கள் கூறியதுண்டு! அவை அனைத்தும் “சிலுவை பாதைகளாகவே” இருந்தது. அவர்கள் தீர்மானித்துச் செல்லும் பாதையில் அடையப் போகும் பாடுகளும் துன்பங்களும் மாறி மாறி அவர்களுக்கு தோன்றியதாக கூறியுள்ளனர்.

  இவைகளின் மத்தியில், நம் இருதயத்தை தேவனுக்கு முன்பாக அமரச்செய்து “தேவனைப் பிரியப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவன் நான்!” எனக்கூறி நம்மை முழுவதும் அவரிடம் ஒப்படைத்திட வேண்டும். இவ்வித அசைக்கப்பட முடியாத, உறுதியான தீர்மானமே நம் ஒவ்வொருவர் ஜீவியத்தின் முக்கியமான பங்காய் மாறிட வேண்டும்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!