அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“என்னிடத்தில் ஒரு நன்மையும் வாசமாயில்லை!” (ரோமர் 7:18) என பவுல் கூறும் உத்தமத்தை நாத்தான்வேல் பெற்றிருந்தார்! “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ?” என கூறிய நாத்தான்வேலை “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்!” என இயேசு அகமகிழ்ந்தார்! (யோவான் 1:46,47). நாத்தான்வேலோ ‘நீர் என்னை எப்படி அறிவீர்?’ என கேட்க, இயேசு பதிலாக, “தன் பிழை உணரும் உத்தமர்களை நான் அறிவேன்.... கேள் நாத்தான்வேலே, நீ உன் வீட்டின் பின்புறமுள்ள அத்திமரத்தின் கீழ் அமர்ந்து என் வேண்டுதலின் கண்ணீரை கர்த்தர் அறிவாரோ? என ஜெபித்தாயே, அங்கே உன்னைக் கண்டேன்!” என கூறியதும், ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் “ரபீ, நீர் தேவனுடைய குமாரன் மாத்திரமல்ல, இஸ்ரவேலனாகிய எனக்கு இனிமுதல் நீர்தான் ராஜா!” என ஆர்ப்பரித்தான்! அதற்கு இயேசு “என்னை விசுவாசித்த நாத்தான்வேலே, இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்! துன்பத்தில், உன் எல்லா ஜெபத்திற்கும் பதில் அளிப்பேன்!” எனக்கூறி அகமகிழ்ந்தார்! (யோவான் 1:50,51).