அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
இவ்வுலகில் துன்பங்கள், உபத்திரவங்கள் வரும் வேளையில், தேவனுடைய சமூகத்திற்கு விரைந்து சென்று, மனதில் விளைந்த சஞ்சலங்களையும், சுய விருப்பங்களையும், அசுசிகளையும் அகற்றி “இயேசுவோடு சமாதானமாய் இருப்பதை” தன் சீஷர்களுக்கு அறிமுகப் படுத்தினார்! இதுவே, நாள்தோறும் அவர் சமூகம் சென்று, அவரோடு சமாதானம் தேடும் பங்காகி விட்டால், நாம் சந்திக்கும் சகல உபத்திர வங்களிலும் இயேசுவைப்போல், நாமும் உலகத்தை ஜெயித்து வாழ்ந்திட முடியும்! என, இயேசு வாக்ரைத்திருக்கிறார்! (யோ.16:33).
இவர்களையே ‘பலவான்கள்’ என்றும்! இவர்களே, ஒருவருக்கொருவர் சமாதானத்தை தங்கள் வீட்டிலும், சபையிலும் காப்பவர்கள் என்றும்! இயேசு அகமகிழ்ந்தார். (லூக்கா 11:21).