அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
07.04.2025
14. மகிழ்ச்சி ஜீவியம் நமக்கு ஒருவழி பாதை!
ஒரு மனிதன் தன் வீட்டில் அற்பமான எளிய உணவையே எப்போதும் சாப்பிட வேண்டிய நிலையிலி ருந்தால், அது அவன் சந்தோஷத்தை வாரிச் சென்று விடலாமா? கூடாது! ஆனால், அம்மனிதனோ அதிருப்தி யுற்று, சிறப்பாய் நாம் சாப்பிட முடியவில்லையே என ஏக்கம் கொண்டு, தன்னைக் காட்டிலும் அதிகம் பெற்று “சீரும் சிறப்புமாய்” வாழும் ஒருவனைக் கண்டு, பொல்லாத பொறாமை எண்ணத்தில் வீழ்வானென்றால்.... ஆ! இப்போதுதான் அவன் சந்தோஷம் பறிபோய்விடும்! இதுதான் உண்மை!! “சந்தோஷம் நமது ஒரு வழிபாதை! அதில் எதுவும் குறுக்கே வர இயலாது! கேளுங்கள், எந்த நிலையிலும் “தேவ பக்திக்கு ஏதுவாய்” நீங்கள் நடந்து கொள்ள தேவன் வழி வைத்துள்ளார்! ‘நானே வழி’ என்றவரிடம் சென்று, செம்மையான வழியில் செல்லுங்கள்!
- ரத்னம்