அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பரலோக சந்தோஷத்தை, குடும்பத்திலிருந்து பறிக்கும் வலுசர்ப்பம் (னுசயபடிn) அறிந்திடுங்கள்! யார் அவன்? “நம்முடைய சகோதரர்களை குற்றம் சுமத்தும்” நஞ்சு கொண்ட வலுசர்ப்பம்! குடும்பத்தில் ‘சகோதரர்களுக்குள் குற்றம் சாட்டுதலா?’ கவனித்துப் பாருங்கள். அது, “வலுசர்ப்பம்”. அன்று தூதன் மீகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் ‘இந்த வலுசர்ப்பத்தோடுதான் யுத்தம்’ செய்தார்கள்! சகோதரர் களுக்குள் யுத்தம் மூட்டி, குடும்பத்தின் அல்லது சபையின் ‘பரலோக சூழலை’ அழிக்க வந்த அந்த வலுசர்ப்பம் தோற்கடிக்கப்பட்டதால் நம் வீட்டிலும், சபையிலும் (பரலேகாத்தில்) அவன் காணப்படாமல் போனான்! ஆகவே பரலோகங்களே, அதில் வாசமாயிருப்பவர்களே, நீடித்த பரலோக மகிழ்ச்சியை காத்து நடவுங்கள்! என்றே வெளி.12:7 முதல் 12 வரை வசனங்கள் நம்மை எச்சரிக்கின்றன! நம் குடும்பமும், சபையும் பரலோகமாய் வாழட்டும்!