அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
21.04.2025
16. ஜெபம், பின்பு தொழுகையாய் மாற வேண்டும்!
நம் கிறிஸ்தவ ஜீவியத்தில் ‘ஜெபம்’ என்பது, கர்த்தரிடத்திலிருந்து நாம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அவரை நோக்கி கரங்களை உயர்த்துவதாகும், அது சரியே! ஆனால், தொழுகை அல்லது ஆராதனை என்பது கர்த்தரிடத்தில் நாம் ஒன்றை கொடுப்பதாகும். நாம், கர்த்தருக்குரிய கனத்தையும்! துதியையும்! அவருக்கு கொடுப்பதாகும். இப்படி ஒரு வல்லமையான ஆராதனை செயல் ‘நம்முடைய இயலாமையை’ நாம் அறிந்திருக்கும் போது மாத்திரமே நிகழ்ந்திட முடியும். அப்போது மாத்திரமே, புத்திக்கு எட்டாத அளவு உயர்ந்து மேன்மையாக நிற்கும் அவரது வல்லமையை நம்மால் காண முடிந்து.... தேவனுடைய மகத்துவத்தைப் போற்றும் தெய்வீக ஆராதனை நம் இருதயத்தில் பொங்கி எழுகிறது!
மெய்யான தொழுகையில், ஜெபம் ஆரம்பமாய் இருந்தாலும், அதன் முடிவோ தொழுகையாய் மாறிவிட வேண்டும்.
- ரத்னம்