அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘எதைக்காட்டிலும்’ இயேசுவின் மீதே அன்பின் தியானம் கொண்ட பேதுரு போன்ற சீஷர்களுக்கு கிடைத்திடும் அரிய பாக்கியம், “ஆண்டவரே, நீர் ‘என்னுடைய’ எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்” என்ற விசுவாசமேயாகும்! (யோவான் 21:17).
ஆம், பேதுருவின் மறுதலிப்பை, ஆண்டவர் முன்கூட்டியே அறிந்திருந்தார்! அவனது மனந்திரும்புதலையும்.... குணப்படுவதையும் அறிந்திருந்தார்! (லூக்.22:31-34). இப்போதும், இராமுழுவதும் கடலில் பிரயாசப்பட்டு.... பேதுரு பசியாய் இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்! தன் பசிபோக்க ‘முன்கூட்டியே’ இயேசு சுடச்சுட சமைத்த அப்பத்தையும் மீனையும் கண்டு அந்த அன்பில் வியப்படைந்தார்! (யோவான்.21:9). அவரது ‘முன்கூட்டிய அன்பைக்’ கண்டு.... அவரைத் தொழுது கொண்டான். “என் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்!” என சீஷர்கள் பெற்ற இந்த அறிவே, 2020-ம் ஆண்டு முழுவதும் நம்மை தேவனுக்குள் பாதுகாப்பாய் வைத்திட வலிமை கொண்டது!