அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
06.01.2025
01. உபதேச அறிவு அல்ல, பிரகாச ஜீவ ஒளி வேண்டும்!
இன்றைய நடைமுறையான கிறிஸ்தவத்தை நேர்மையான உள்ளத்தோடு சந்திக்க நீங்கள் துணிந்தால், அது உங்களுக்கு மிகுந்த வேதனையைத்தான் தரும். பொதுவாக நம்மில் அனைவருமே ‘உபதேசத்தில்’ நல்ல அறிவு கொண்டவர்களாய் இருக்கிறோம். ஒரு பொதுவான பிரசங்கி பேசுவதை கேட்கும் இன்றைய கிறிஸ்தவன், அவர் அடுத்து என்ன பேசுவார் என தெரியுமளவிற்கு, வேத அறிவு இருக்கதான் செய்கிறது. ஆனால் ஆவியின் உண்மையான சத்தியத்தின் கூர்மை..... ‘தொட்டவுடன் வெட்டிவிடும்’ சவரகத்தியின் பதத்தை விட அதிக கூர்மை கொண்டதாகும்.
சிறந்த பிரசங்கங்கள் என இவர்கள் கூறிக்கொண்டது கூட, மிக பிரகாசமான ‘கேமரா - பல்பு’ போலவேதான் இருக்கிறது. ஸ்விட்ச் செய்த அடுத்த வினாடியே, கண்கூசும் ஒளியை தந்துவிட்டு அந்த பல்பு ப்யூஸ் ஆகி எரிந்து விடும். இன்றைய சுவிசேஷ ஊழியமும் ‘நொடிப்பொழுது ஒளி தந்து’..... அடுத்த வினாடி வல்லமை அற்றதாய் வீழ்ச்சி அடைந்துள்ளது!
- ரத்னம்