அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

11.08.2025
32. அவர் எங்களுக்குப் போதும்!
அவர் நமது சொந்த தகப்பனாய் இருப்பது பாக்கியம்! ‘உங்கள் பிதா’ உங்கள் தேவைகள் இன்னதென்று அறிந்திருக்கிறார்! ‘ஏற்ற சமயத்தில்’ சகாயம் செய்திடும் கிருபையின் உறைவிடம் அவர்!
‘இத்தனையாய்’ தகப்பனை அறிந்து வாழும் பிள்ளைகள், மகிழ்ச்சியுடன் “அவர் எங்களுக்குப் போதுமானவர்” என களிகூர்ந்திடும் பாக்கியம், நம் அனைவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மங்களம் உண்டாக ஒலிப்பதாக! (யோவான் 14:8).
- ரத்னம்
