பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


04.11.2024

45. நம்மை ‘நல்லவனாய் மாற்ற’ கிறிஸ்து வகுத்த வழி!

 கிறிஸ்தவ விசுவாசிகள்கூட, உலகத்திலுள்ள பொதுவான பக்தி மார்க்க போதனைகளைத் தான் கைக்கொள்ளப் பார்க்கிறார்கள். அவர்களின் போதனை என்னவெனில் “நீங்கள் நல்ல மனுஷனாய் மாற, நல்ல கிரியைகளை செய்யுங்கள்” என்பது தான். இது எப்படி யெனில், ஒரு கசப்பான மரத்தைப் பார்த்து “நீ தொடர்ந்து நல்ல கனி கொடுத்தால், கசந்த மரம் ஒழிந்து, நல்ல மரமாய் மாறிவிடலாம்!” எனக் கூறுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. 

 “இது சாத்தியமில்லை” என்பது உங்களுக்கே தெரியும்! பின்பு ஏன் நீங்கள் தொடர்ந்து நல்லது செய்து விட்டால், நல்லவனாய் மாறிவிடலாம் என அஞ்ஞானிகளைப்போல் எண்ணிக் கொண்டீர்கள்? அந்த கெட்ட மரமே ஒழிய வேண்டும்! இதைத் தவிர வேறு வழியில்லை.

  நான் சிலுவையில் அறையப்பட்டேன்!  இனி நான் அல்ல! என்னில் பிழைத்திருப்பது கிறிஸ்து மாத்திரமே! என்ற சத்திய தொனி, கலாத்தியர்2:20- ம் வசனத்தில் தொனிப்பதை, கவனித்து வாழுங்கள்!

- ரத்னம்


31.10.2024

44.  தூக்குமேடையை “ராஜ பவனியாய்” மாற்றிய தேவன்!


  ன்று, எஸ்தர் புத்தகத்திலுள்ள மொர்தெகாயுவிற்கு நடந்த சம்பவத்தை சற்று எண்ணிப் பாருங்கள்! தன் காழ்புணர்ச்சியை நிறைவேற்றும்படி, இந்த மொர்தெகாயின் இழிவான சாவிற்குத் தூக்கு மேடையை ஆமான் அன்று இரவு முழுவதும் தயார் செய்து கொண்டிருக்கிறான்! 

   மறுபுறத்திலோ, அவனை எவ்விதம் தேசத்தில் கனமடையச் செய்வது என, தேவன் தன் மிகுந்த அன்பில் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்!! மொர்தெகாயோ, எதுவுமே அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை, அந்த ராத்திரியில் அவனை எழுப்பி “தூக்கு மேடையை மாத்திரம்”காண்பித்திருந்தால் அவன் எவ்வளவு கதிகலங்கிப் போயிருப்பான் என்பதை எண்ணிப் பாருங்கள்! 

 இன்றும் அப்படித்தான், அநேக கிறிஸ்தவர்கள் ‘துன்பங்களை மாத்திரம்’ காண்கிறார்களே அல்லாமல், “தெய்வ அன்பின் பாதுகாப்பையோ” காணத் தவறுகிறார்கள். இவர்களின் கண்கள் “மொர்தெகாயின் நன்மைக்கு செயல்பட்ட” தெய்வ அன்பைக் கண்டிருந்தால், துன்பமென்னும் மலையை நிமிர்ந்த தோளோடு எதிர்த்து நின்றிருப்பார்களே! அந்த மலை, சமுத்திரத்தின் நடுவில் கவிழ்ந்துவிழும் அற்புத ஜெயத்தையும் கண்டிருப்பார்களே!!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!