அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
நம் மேய்ப்பனாய் இருக்கும் ஆண்டவர் ‘நித்தமும்’ (னுயடைல) நம்மை அவருடைய சித்தப்படி நடத்தவே விரும்புகிறார்!(ஏசா.58:11). நம் ஆண்டவர் இயேசுவும், ஒவ்வொருநாள் ‘அதிகாலையும்’ தன் செவிகளை தன் பிதாவிற்கு திறந்து ‘அனுதினமும்’ தன் பிதாவின் சித்தம் செய்தார்! (ஏசாயா 50:4,5).
இவ்வாறு, தினசரி (நித்தமும்) நம்மை நடத்துகிறபடியால், ‘மகா வறட்சியான காலங்கள்’ சம்பவித்த சூழ்நிலைகளில் ‘நம் ஜீவிய தோட்டத்தில்’ அவரே நமது ஊற்றுக்கண்ணாய் ‘நீர்ப்பாச்சுவார்!’. அந்த நீரூற்று வற்றுவதேயில்லை! (ஏசாயா 58:11). இவ்வாறு, கர்த்தரால் நித்தமும் நடத்தப்படுகிறவர்களே ‘நிலைத்திருந்து’ மிகுந்த கனி கொடுத்து வாழ்வார்கள்! அவர்களே ‘கிறிஸ்தவர்கள்!’ (யோ.15:7,8).