அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

26.10.2026 துளிகள் - 43
எனது அவசரத்திற்கு மாத்திரமே ஜெபிப்பதில், விசுவாசம் இருப்பதில்லை!
இன்றுள்ள திரளான கிறிஸ்தவர்களின் நிலை என்ன தெரியுமா? எங்களுக்கு மிகுந்த விருப்பம் இருந்தபடியால், தேவனிடத்தில் ஜெபித்தோம், என்பதுதான்! இவ்வாறு நாம் விரும்பினால் ஜெபிப்பது, உருது மொழியில் ‘பூனை விசுவாசம்’ என்று பெயர்! பசி எடுத்தவுடன், அந்த பூனை ‘மியாவ்’ என கத்தியது அவ்வளவுதான். அதுபோலவே ஒரு விஷயத்தைக் குறித்து நமது விருப்பப்படி பசியும் தாகமும் ஏற்பட்டால் மாத்திரமே உண்டாகும் ஜெபம் ‘மியாவ்’ என கூறும் முறுமுறுப்பான ஜெபமேயாகும். அது எப்படியெனில்: “அன்புள்ள தேவனே, இந்த நேரத்தில் எனக்கு உடனடியாக உதவி தேவை.... இவ்வாறு நான் விரும்பி ஜெபித்திடும் ஜெபத்தை ஏற்றுக்கொள்வீராக!” என தொனிக்கும் ஆத்திரமான முறுமுறுப்பின் விண்ணப்பம்! இவ்வாறாக அவிசுவாசத்தை கலந்து வைத்து ஜெபிக்கின்ற ஜெபமே எண்ணற்றோரின் ஜெபமாயிருக்கிறது. மாறாக, என் முழு இருதயமாய் நான் தேவனைத் தேடும் போது, அவர் என்மீது இரக்கத்தையும் அவருடைய கிருபையும் பொழிகின்ற நேரத்தில் ‘என் துக்கம் நீங்கி மகிழ்ச்சி புரண்டோடுவதை’ காண்கிறேன்! இங்குதான் நான் தேவனை உண்மையாய் விசுவாசிக்கும் பாக்கியம் கிட்டுகிறது!
- ரத்னம்
