அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
லூக்கா 16-ம் அதிகாரத்தில் இயேசு குறிப்பிட்ட லாசருவையும், ஐசுவரியவானையும் கண்டால், எளிய உணவிலும் தேவனைத் துதித்து யாதொரு முறுமுறுப்பும் இல்லாமல் அதைப் புசித்து உடம்பில் பருக்களுடன் ஐசுவரியவானின் வாசலில் கிடந்த தரித்திரன் லாசருவை “தெய்வ கிருபையற்றவன்” என்றே கூறுவார்கள். இரத்தாம்பரமான விலையேறப் பெற்ற வஸ்திரம் தரித்து “ஆடம்பர மேஜை உணவு” புசித்த ஐசுவரியவானை “இவருக்கல்லவா தேவ கிருபை கிட்டியுள்ளது!” எனவும் கூறுவார்கள். தெய்வ கிருபைக்கு இவர்கள் காணும் விளக்கங்கள் தவறு என்பதை “இவர்கள் இருவருக்கும் நித்தியத்தில் என்ன நடந்தது” என இயேசு இதே அதிகாரத்தில் விளக்கித் தெளிவுபடுத்தினார். ‘லோக ஐசுவரியத்தை’ கிருபை என எண்ணியவன் நரகத்திலும்! முறுமுறுப்பில்லாது ‘துதி நிறைந்து’ வாழ்ந்த பக்திமான் லாசருவே தெய்வ கிருபையைப் பெற்று பரத்திற்கும் சென்றதை, நாம் கவனம் கொள்ளக்கடவோம்!