அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
நம் வாழ்வின் சுமை எதுவாயிருந்தாலும் “நானே வாசல்” என இந்த புதிய ஆண்டும் நம் முன் நிற்கும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமாக! இயேசு, நம் இரட்சகர் மாத்திரமல்ல, நம்மை நடத்தும் ‘ஆண்டவராய் - கர்த்தராய் THE LORD’ இருப்பது நாம் பெற்ற பாக்கியம்!
இந்த ஆண்டு முழுவதும், நம்மை அவரின் சொந்த ஆடுகளைப் போல், நம் கர்த்தர் (LORD) நல்ல மேய்ப்பனாய் முன்நின்று நடத்துவார்! ஆகவே, நாம் யாதொன்றிலும் தாழ்ச்சி யடைவதில்லை! (சங்.23:1). உண்மைதான், நாம் அவரது சொந்த ஜனம்! அவரது மேய்ச்சலின் ஆடுகள்! ஆகவே, அவர் நடத்தும் எவ்வித வாசல்களிலும், துதியோடும் புகழ்ச்சியோடும், நமது “கர்த்தரின் டுடீசுனு நாமத்தை” ஸ்தோத்தரித்து அவரைப் பின்செல்வோமாக! ஏனென்றால், நம் கர்த்தர் நல்லவர்! அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது! வருஷந்தோறும் அவரது உண்மை மாறுவதேயில்லை! (சங்.100:3-5). அல்லேலூயா!