அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
ஒரு சூழ்நிலை அல்லது ஒரு தேவையில் ஏற்படும் துயரத்தை இந்த உலகில் பணமோ அல்லது எந்த மானிடரோ “உனக்காக யாவையும் செய்து முடிப்பேன்” (சங்.138:8) என நமக்கு கூறிட இயலாது! நம் கர்த்தர் ஒருவரே அவ்வாறு கூற வல்லவர்! அவருடைய கிரியையில் சில தாமதமோ அல்லது தடங்கலோ ஏற்படுவதுபோல், நாம் எண்ணும் நேரத்தில் “கர்த்தாவே உம் கரத்தின் கிரியைகளை நெகிழ விடாதிரும்!” என விசுவாசத்துடன் ஜெபிக்கும் உரிமையை நாம் பெற்றிருப்பதும் நமது பாக்கியம்.
இந்த பாக்கியத்தை நாம் பெற்றதற்கு ஆதாரம் ஒன்று உண்டு! அதுவே, முதல் வசனமாயும் உள்ளது: மானிடர்களுக்கு ‘அனேக தேவர்கள்’ உண்டு! அது, பணமோ, ஆஸ்தியோ, உதவி என நம்பும் மானிடரோ.... இவ்வாறு அனேக தேவர்களின் முன்னிலையில், நாமோ “முழு இருதயமாய்” என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே, எனக்காக யாவையும் செய்து முடிப்பார்! என கெம்பீரித்து ஸ்தோத்தரிக்கிறோம்! (சங்.138:1). ஆகவே, எவ்வித இன்னல் நேரத்திலும் அவரது கரத்தின் கிரியை ஒன்றையே நோக்கி காத்திருக்கிறோம்! அல்லேலூயா.