பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

Red Became White - Children's Story

அங்கிள் ரத்னம்
சிறுவர் பாச கதை புத்தகங்கள்: Red Became White, Paralogapokkishangal Books, English Edition
நன்கொடையாக : ₹ 30

வாலிபம் இயேசுவுக்கே அர்ப்பணம்! - My Youth to Jesus

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: அழிவு நோக்கி செல்லும் வாலிபனுக்கு.... இந்த புத்தகம் தந்து உதவுங்கள். உலகில் காணப்படுபவைகள் அனைத்தும் நிலையானவை அல்ல. அவைகள், நம்மை விட்டு கடந்து செல்ல கூடியவைகள்! அவைகளை நாம் பிடித்து வைத்திருக்க முடியாது. இந்த உலகத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக வாழ்ந்து புகழ்பெற்ற சாலொமொன் மாமன்னன் “மாயை, மாயை எல்லாம் மாயை” என்று கூறி, உலக மாய இன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்! (பிரசங்கி 1:2). ‘தன் சிருஷ்டிகரே’ அழிவில்லா நித்திய இரட்சகராய் இருப்பதை மாயையில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் அறியாதிருப்பது துயரமல்லவா? வாலிபனே, உன் ஆத்துமா, இரட்சகர் இயேசுவால் இரட்சிக்கப்பட்ட இந்த புத்தகம் உனக்கு நிச்சயமாய் உதவிடும்!
நன்கொடையாக : ₹ 60

ஆழத்தின் அழைப்பு

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ஆழத்தின் அழைப்பு, Azhatthin azhaippu, Deep Calls Deep, Paralogapokkishangal Subamangala Theiveega Illam 05 January 2019 Purchase Product - Books
நன்கொடையாக : ₹ 35

நிறைவான ஆறுதல்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: நெஞ்சுக்கு வேண்டும் நிம்மதி! வனாந்திரமாம் இப்பாலைவன வாழ்வில், எம் ஆத்ம தாகம் தீர வேண்டும்! பரலோக சிம்மாசனத்தில் இருந்து புரண்டுவரும் ஒரு நதி உண்டு, அதுவே எம் தாகம் தீர்க்கும் எனக் கேட்டோம்! சுவிசேஷம் அறைகூவிய சேதி அறிந்தோம்...... தாகம் தீர்க்க ஓடிவந்த எமக்கு “நிறைவான ஆறுதல்” தந்த ஜீவ வழியும் கண்டோம்....... ஜீவ தண்ணீரால் எம் தாகம் தீர்த்தோம்!
நன்கொடையாக : ₹ 40

மகிமை மேல் மகிமை

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: “நாம் ஒன்றாயிருக்கிறது போல” என இயேசு குறிப்பிட்ட “நானும் பிதாவும்” உறவில் ஜொலித்திடும் தெய்வீக மகிமையை, சீஷர்களுக்கு கொடுத்ததையே, யோவான் 17:22ல் “நீர் எனக்குத் தந்த மகிமையை, நான் அவர்களுக்கு கொடுத்தேன்!” என்றார். இதுவே, இயேசு நமக்கு அருளிய மகிமையின் சுவிசேஷம்!
நன்கொடையாக : ₹ 90

கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்) The Blood Martyres of God.

உத்தம தேவ தாசர்கள்
மிஷனெரி புத்தகங்கள்: தங்கள் ஜீவனையும் அருமையாய் எண்ணாமல் ஆத்தும பாரம் கொண்டு அழியும் ஆத்மாக்களை நித்தியத்திற்கு நடத்திய தேவதாசர்கள், தங்கள் சபையின் தெய்வ பணி நிறைவேற்றி தங்கள் எஜமானை தரிசிக்க பலியானவர்களின் ஜெயத்தின் ஓர் அரிதான புத்தகம்.....
நன்கொடையாக : ₹ 70

குயவனின் பாண்டம்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ஆதியில் உறைந்திட்ட “உம் மகிமை” எம்மிலே விளங்கிட ! உம்மைப்போல் எம்மையும் வனைந்திட! எம்மைத் தேடி வந்த உத்தம குயவன் நீர்! உம் கையின் களிமண் நான்! போற்றி, போற்றி ஒப்பற்ற குயவனே போற்றி!!
நன்கொடையாக : ₹ 40

மலர்ந்திடும் புது வழி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: இஸ்ரவேலின் பரம குடும்பத்திற்கு புதிய உடன்படிக்கை படைத்தார் ஆண்டவர் இயேசு! பழைய உடன்படிக்கையில் கர்த்தரை முகமுகமாய் அறியாத தடையை, இயேசு தன் மாம்சத்தின் சுயம் உடைத்து “பிதாவின் சமூகம்” வெளிப்படுத்தினார்! அவரின் பேரின்ப சமூகம்! அவரின் “புது வழி” இரட்சிப்பு! அனைத்தும் “தன் மூலமாய்” உண்டாக்கிய சீரேசு நாதரின் புகழ், அவரது சபையாகிய குடும்பத்தில் நற்கந்தம் வீசி ஓங்குவதாக!
நன்கொடையாக : ₹ 100

அன்பின் கொடுமுடி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: “பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 90

பரலோக பாசக்கதை - பாகம் 1

அங்கிள் ரத்னம்
சிறுவர் பாச கதை புத்தகங்கள்: கோடி மலராய் பூத்து மலர்ந்த தம்பி, தங்கையரே! “கதைகளில் பல தினுசு…. அதில் இதுவும் ஒரு தினுசா?” அல்ல…. அல்ல….. இது சாதாரண கதை அல்ல! நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் அற்புத கதைகள்!! ஆம், அத்தனையும் உங்கள் மடியில் விழுந்த பரலோக பரிசுகள்!! உங்களை அப்படியே கொள்ளை கொண்டு……. பரலோக நேசர் இயேசுவின் மார்பில் சேர்த்திடும் உயிருள்ள பாசக் கதைகள்!!
நன்கொடையாக : ₹ 125

பரலோகப் பாசக்கதைகள் - பாகம் 2

அங்கிள் ரத்னம்
சிறுவர் பாச கதை புத்தகங்கள்: இந்தப் “பாசக் கதைகளின் பரிசு” உங்கள் நெஞ்சத்தில் வேரூன்றி காலா காலமாய் கனி தந்து கொண்டே இருக்கும் ஒப்பற்ற பரிசு! ஏனென்றால், இவை அனைத்தும் இறைவன் வாழும் பரலோகம் அருளிய மதுரங்கள்! இதை அள்ளிப் புசித்து, பரலோக தோட்டத்தின் பசுமரமாய் செழிப்படையுங்கள்! தெய்வ சுவையூட்டும் வாழ்வின் நறுமணத்தை இறை புகழுடன் எங்கும் மலர்ந்திடச் செய்யுங்கள்!!
நன்கொடையாக : ₹ 125

ஜெய கிரீடம்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: சுயத்தை அழிக்கவே இயேசு ‘மரணபரியந்தம்’ சிலுவைக்கு கீழ்ப்படிந்தார்....... இப்போது, அதே ஜெயத்தை முடிசூடவே தன் சீஷர்களை இப்பூமியில் வைத்திருக்கிறார்!.... அந்த குருவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவே இந்த புத்தகம் உங்களை அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 80

பலிபீட அக்கினி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ‘முழுக்கிரயம் இல்லாமல்’ சீஷத்துவம் ஏது? ‘சர்வாங்கம் இல்லாமல்’ பலிபீடம் ஏது? ஓ, தேவா! சர்வாங்க தகனம் எங்கள் சபைகளில் திரும்பட்டும்! சுகந்த வாசனையென, பலிபீடம் சிவக்கட்டும்!
நன்கொடையாக : ₹ 70

இரத்தக்கறை (தெய்வ அன்பு பிரதிபலிப்பு சித்திரம்)

அங்கிள் ரத்னம்
சிறுவர் பாச கதை புத்தகங்கள்: இதயத்தை திருப்பும் கதை! தன்னை பலியாக்கி, நம்மை மீட்ட இரட்சகரின் அன்பை உங்கள் பிள்ளைகள் அறிய வேண்டும்!
நன்கொடையாக : ₹ 35

ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி?

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: “நாம் அவரை நேசிப்பதற்காகவே தேவன் இருக்கிறார்! அவருடைய சமூகத்தை நாம் களிகூர வேண்டும் என்பதற்காகவே ஜெப ஜீவியத்தை நமக்கு வழங்கியிருக்கிறார்!” நான் பெற்ற அதே பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது ஜெபம்! -மேடம் குயான்
நன்கொடையாக : ₹ 55

காணுதே! அதோ இன்ப கானான் - Behold, The Blessed Canan

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: பாலும், தேனும் ஓடும் இன்ப கானான்! அதுவே, நாம் சுதந்தரிக்கும் வாக்குத்தத்த பூமி! பழைய உடன்படிக்கைபடி வெளியே அல்ல, அது நமக்குள் சுதந்தரிக்கும் ‘பிதாவின் பூரண சற்குணம்!’.
நன்கொடையாக : ₹ 100

தேவ சாயல்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: அன்று ஏதேன் தோட்டத்தில், தான் இழந்த தேவசாயலை மீண்டும் இந்த மண்ணில் பெறுவதற்கு வழிவகுத்த நம் சிலுவைநாதர் இயேசுவுக்கே என்று புகழ் உண்டாகுவதாக!!
நன்கொடையாக : ₹ 80

பரலோக பாசவலை

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: பரலோக பாசவலை. paralooka paasavalai. The Heaven's Net of Loves.
நன்கொடையாக : ₹ 40

தெளிநீரோடை

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: மாசு சூழ்ந்த இந்த பாருலகில் மாசு நீக்கும் தெளிநீர் எங்கே? என மயங்கும் வேளையில், பாவக்கறை நீக்கும் தூய்மையாய்..... லோக சிந்தை அகற்றும் புனிதமாய்..... சுயத்தின் பிணி தீர்க்கும் தீர்த்தமாய்..... கடின இதயம் மாற்றும் மென்மையாய்..... “பரமனின் தெளிநீரோடை” உண்டு என அறிவதும் அதில் மூழ்கி திளைத்து..... “பரமனைப் போலவே” தூய்மை அடைவதும் பாக்கியமன்றோ!!
நன்கொடையாக : ₹ 35

மாசு நீக்கும் வான் துளிகள்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: படு குழி பாவ சேற்றிலிருந்து தூக்கி எடுத்த தேவா! எமது பள்ளங்களை நிரப்பியது மாத்திரமல்லாமல், பாலைவன எம் வாழ்வை சோலை மயமாக்கும் உம் திவ்விய பிரசன்னத்தை எமக்களித்தீர்! உம் உறவோடு வந்த “வான் துளிகளையும்” எம்மீது பெய்வித்து, அன்றாட மாசு நீக்கி..... ‘ஒவ்வொரு துளிகளாக’ உம் திவ்விய சுபாவத்தை எம்மில் சேர்த்திட துணைபுரிந்தீர்!! அத்தனையும் அடைந்திட வகை செய்தது, நீர் நடந்து வைத்துச் சென்ற பொன்னான “சிலுவைப் பாதை” அன்றோ! எதையும் இழந்திடுவோம்..... ஆனால், உம்மையும், நீர் பொழியும் “மாசு நீக்கும் வான் துளிகளையும்” எமக்களித்த, அந்த ஒப்பற்ற “சிலுவை வழியை” இழந்திட மாட்டோம்!! இத்தனை பெரிய பாக்கிய வாழ்வை, இப்புத்தகம் வாசித்திடும் ஒவ்வொரு மாந்தருக்கும் அருள்புரிவீராக!
நன்கொடையாக : ₹ 35

கர்த்தரின் தீபங்கள் (50 மிஷனெரிகள்)

தியாக ஏடுகளிலிருந்து . . .
மிஷனெரி புத்தகங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட 50-மிஷனெரிகளின் ஊழிய புள்ளி விபரத்தைவிட, அவர்களின் சவாலிடும் வாழ்க்கைப் பின்னணியை உற்று நோக்கிடவே.... இந்த அரிய புத்தகம்!
நன்கொடையாக : ₹ 50

வனாந்திரத்தில் நீர்த்தடாகம்! - Pool of waters in Desert

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: இல்லாததை இருப்பதாக மாற்றும் புத்தகம்! தண்ணீரை திராட்சை ரசமாய் உண்டுபண்ண மனுஷரால் கூடுமோ? அதுபோலவே பாலைவனத்தில் ‘நீர்த்தடாகம்’ கொண்டுவர மனுஷரால் கூடுமோ? இந்த புத்தகம், அப்படியொரு மாற்றத்தை உங்கள் ஜீவியத்திலும், குடும்பத்திலும், ஊழியத்திலும் உண்டாக்கும்! அது, கர்த்தரின் அற்புத செயலாய் விளங்கும்!
நன்கொடையாக : ₹ 120

சீயோனே, கெம்பீரி! - O, Rejoice Zion

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: உயிரோட்டமான இந்தப் புத்தகம் . . . . ‘நீர் இல்லாமல் கதி இல்லை!’ என்பதே மெய் விசுவாசம்! ‘தைரியம் இழக்காமல்’ மேல் நோக்கிப் பாருங்கள்! பரலோக ராஜ்ஜியத்தில் ‘உங்கள் வேர்’ செழிக்கட்டும்! ‘அவரோடு தனிப்பட்ட உறவே’ மெய் ஆராதனை! ‘சுயத்தை’ வெறுக்காதவனுக்கும், பாவிக்கும் வித்தியாசமில்லை! காத்திருந்து முன் செல்லுங்கள், ஜெயம் பெறுவீர்கள்! “ஊற்றுத்தண்ணீரே பொங்கிவா!” நமது விசுவாச பாடல்! ஆம்! கர்த்தர் நம்மோடு இருப்பதால், சீயோனே கெம்பீரி!
நன்கொடையாக : ₹ 140

உமது நாமம் எமது ஜெயம்! (In Thy Name, We Conquer)

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: அன்று, “பெலிஸ்திய வீரனே, நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய, சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வருகிறேன்! ‘இஸ்ரவேலை காத்திட தேவன் ஒருவரே உண்டு’ என, பூலோகத்தார் எல்லோரும் அறிந்து கொள்வார்கள்..... ஏனெனில் ‘யுத்தம் கர்த்தருடையது’ என்ற முழக்கத்தோடு, பெலிஸ்தியனை ஒரே ஒரு கல்வீச்சினால் அவனைக் கொன்றான்! இன்று, “கர்த்தருடைய நாமத்தை” நம்பி விசுவாசித்து வாழ்ந்த இந்த தாவீதின் ஜெயமே, நமது ஜெயமாகட்டும்! இந்த தாவீதின் சந்ததியிலிருந்து வந்த நம் இரட்சகரின் முழக்கமும், நமது முழக்கமும், “உம் நாமத்தில் கொண்ட விசுவாசமே, எமது ஜெயம்” என நாள்தோறும் அப்பியாசித்து, பழகி..... அப்பியாசித்துப் பழகி, தொடர்ந்து ஜெயமுடன் வாழ்வோமாக!
நன்கொடையாக : ₹ 150

உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ‘வாக்குத்தந்தவரே’ நமது சொந்தமாகட்டும்! வெறும் வாக்குதத்தம் என்பதில் வார்த்தை உண்டு, தேவன் இருப்பதில்லை! எனவேதான் “உமது வாக்குத்தத்தங்கள்” என்பதில் வாக்குரைத்த தேவனும், வாக்கு தந்த வார்த்தைகளும் உயிரோட்டமாய் இருப்பதை காண்கிறோம். வாக்குத்தத்தங்களை மாத்திரமே நாடும் இன்றைய கிறிஸ்தவம் “கொடுத்ததை கொண்டாடி, கொடுத்தவரை புறக்கணிக்கும்” இடத்திற்கு சென்றுவிட்டார்கள்! ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார் (எபி.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையை பாருங்கள்! இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!
நன்கொடையாக : ₹ 150

ஒழிந்து போகாத கல்வாரி அன்பு!

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: தெய்வ அன்பின் வெள்ளமே வருக! திறந்து வைக்கப்பட்ட ஒரு அறையில், சூரிய ஒளி எவ்வாறு பாய்ந்து நிரப்புகிறதோ, அதேபோலவே நம்முடைய இருதயத்தை தம்முடைய அன்பினால் நிறைத்து விடுவதற்கு தேவன் மகா விருப்பம் கொண்டுள்ளார். நாம் சுவாசிக்கும் காற்று நம்மைச் சுற்றிலும் சூழ்ந்து நெருக்கி இருப்பதைப் போலவே, தன்னை சுவாசிக்க விரும்புவோருக்கு ‘தேவ அன்பு’ அவர்களைச் சூழ்ந்து நெருக்கி நிற்கிறது! அந்த அன்பு உள்ளே பிரவேசிக்க முடியாமல் தடை செய்யாதிருங்கள்! நீங்கள் தடைகளை அகற்றி, முழு இருதய கதவையும் திறந்துவிட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படி நிறைத்து விடுவதைக் காண்பீர்கள்!
நன்கொடையாக : ₹ 55

கர்த்தரோடு உறவே நமது வெற்றி!

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ஜெய ஜீவிய இரகசியம்! ஜீவியத்தின் ‘ஒவ்வொரு நாளும்’ வெற்றி வாழ்க்கையே ஆதி கிறிஸ்தவர்களின் விசேஷித்த அனுபவம்! அந்த இரகசியம் அவர்கள் ‘கர்த்தரோடு கொண்ட உறவு’ என்பதை 1கொரிந்தியர் 15:57 வெளிப்படுத்துகிறது! தோல்வியில் தொய்ந்துபோன உங்கள் ஜீவியத்தை உற்றுப்பாருங்கள்.... அங்கே, தேவன் இல்லை என்பது ஒன்றே விடை! உபதேசம் ஏராளம் உண்டு, வேத அறிவு உண்டு, தேவன் இல்லையே! ஏனோக்கு ‘தேவனுக்குப் பிரியமானவனாய்’ வாழ்ந்த இரகசியம் “அவன் தேவனோடு சஞ்சரித்தான்” என்பதை நிரூபணமாய் அறிவோமாக! (ஆதி.5:24, எபி.11:5). எது எதையோ நாடி “தேவ பிரசன்னத்தின் உறவு நாடாத” கிறிஸ்தவர்கள் இன்று ஏராளம்! யாரோ சில மனுஷர்களைப் பிரியப்படுத்தி வாழ்பவர்கள், தேவனை பிரியப்படுத்தி வாழ்வதும் கூடாத காரியம்! தேவனைத் தேடி, அவரது சமூகத்தை நாடி வாழும் பக்தர்கள் யாவருக்கும் ‘வெற்றி வாழ்க்கை’ நிச்சயமாய் உண்டு! இந்தப் புத்தகம், உங்களை தேவனை கிட்டிச் சேர்ந்திட நடத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!
நன்கொடையாக : ₹ 150

இயேசு அருளிய அன்பின் சீஷத்துவம்!

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: சீஷத்துவதற்காக அல்ல, தெய்வ அன்பிற்கே சீஷத்துவம்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10) என்பதே இயேசு கற்றுத் தந்த சீஷத்துவம். குருவாகிய இயேசு முன்சென்று, நமக்கு பாதை காட்டிய ‘சிலுவையின் வழி’ கண்டவன் மாத்திரமே, கல்வாரி அன்பின் உயர்ந்த நிலைக்குச் சென்று, தன்னை நேசிக்கும் சுயத்தை வெறுத்து, முடிவு வரை பிறரை நேசிக்கும் அன்பில் நிலைத்திருப்பான்! அவனே, ஜெயம் பெறுவான்! இவ்வாறு, ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்திடும் பயணமே தெய்வ அன்பை நமக்குள் பூரணப்படுத்தும், ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது! அன்பே பிரதானம்!’ என்ற இலக்கே, நாம் செல்ல வேண்டிய சீஷத்துவ வழி!
நன்கொடையாக : ₹ 75

இயேசு அருளிய அன்பின் சீஷத்துவம்!

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: சீஷத்துவதற்காக அல்ல, தெய்வ அன்பிற்கே சீஷத்துவம்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10) என்பதே இயேசு கற்றுத் தந்த சீஷத்துவம். குருவாகிய இயேசு முன்சென்று, நமக்கு பாதை காட்டிய ‘சிலுவையின் வழி’ கண்டவன் மாத்திரமே, கல்வாரி அன்பின் உயர்ந்த நிலைக்குச் சென்று, தன்னை நேசிக்கும் சுயத்தை வெறுத்து, முடிவு வரை பிறரை நேசிக்கும் அன்பில் நிலைத்திருப்பான்! அவனே, ஜெயம் பெறுவான்! இவ்வாறு, ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்திடும் பயணமே தெய்வ அன்பை நமக்குள் பூரணப்படுத்தும், ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது! அன்பே பிரதானம்!’ என்ற இலக்கே, நாம் செல்ல வேண்டிய சீஷத்துவ வழி!
நன்கொடையாக : ₹ 75