அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிதைக்கப்பட்டு இரணகளமாய் சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பாருங்கள்! “அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்றே ஏசாயா.53:2 கூறுகிறது. ஆனால், 2 நாள் முடிந்து 3 -ம் நாளில் “தழும்புகளுடன்” உயிர்த்த இயேசுவின் மகிமை கெம்பீரத்தையும் பாருங்கள்! நம்போன்ற மாம்சத்தில் வந்து, எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டு, அவரது மாம்சம், சுயம், உலகம்.... அவர் அறிமுகம் செய்த சிலுவையில் சிதைக்கப்பட்ட கோலமே இந்த கல்வாரி காட்சி!
இந்த ‘கல்வாரி அன்பைக்’ கண்டு, தன் சிலுவை எடுத்து குருவைப் பின்பற்றுபவர்கள் அடைவதே “மகிமையான கிறிஸ்துவின் பூரண அழகின் அவரது சாயல்!” ஆ, இதுவே இயேசுவின் மகிமையான சுவிசேஷம்! இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் வெகு சிலரே! (ஏசாயா.53:1).