அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
31.03.2025
13. ‘ஆராதனைக்குரிய கௌரவம்’ போதகர்களையும் சார்ந்துள்ளது!
ஆராதனை விஷயம், சபையாரைப் பார்க்கிலும் முன்னால் நிற்கும் ஊழியர்களையே அதிகமாய் சார்ந்துள்ளது. இதற்கு யாதொரு சந்தேகமுமில்லை. நாம் கர்த்தருக்கு நம்மை முழுவதுமாய் ஒப்புவித்து, அவர் நமக்குள் வசிக்க இடங்கொடுத்து, அவரையே சார்ந்து பரிசுத்தமாய் வாழும் உத்தமம் அந்த ஸ்தல சபை ஊழியனுக்கு வேண்டும்! இது இலேசான காரியமன்று. தேவ ஊழியரில் அநேகர் “பயபக்தியான ஆராதனை” எவ்வளவு கஷ்டமான காரியம் என அறிந்து, அதை தள்ளிவிட்டு, எப்பொழுதும் போல உண்மையற்ற ஆராதனைகளை நடத்தி தங்கள் கடமையை கழித்துவிடலாம். ஆனால்.... அவர்களும் கெடுவார்கள், அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்ட சபையும் கெடும்! இன்றைய சபைகள் விழிப்படைந்து எச்சரிக்கையாய் இருப்பார்களாக!
- ரத்னம்