அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

22.12.2025
51. கிறிஸ்துவின் சுவிசேஷ நற்செய்தியை, தீவிரமாய் அறிவியுங்கள்!
உண்மைதான் “கிறிஸ்து பிறந்தார்” என்ற செய்தி அவருடைய பக்தர்களின் உள்ளத்தை நிச்சயமாய் கொள்ளைக்கொள்ளும்! பரவசப்படுத்தும்! அன்று தோன்றிய தேவ தூதன், ஜனங்கள் எல்லோரையும் நோக்கி: “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். ‘இன்று’ கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊராகிய பெத்லகேமிலே பிறந்திருக்கிறார்!” (லூக்2:10,11) என அறிவித்தான்!
இந்த ஆசீர்வாதமான செய்தியை, சாபத்தில் வாழும் உங்களைச் சுற்றியுள்ள லோக மக்களுக்கு தெரிவிப்பீர்களா? உங்களைச் சுற்றியுள்ள புறமதஸ்தர்கள் மீதுகொண்ட அக்கறையை “கிறிஸ்துமஸ் தினம்” வலிமையாய் தூண்டுவதாக! சுவிசேஷத்தின் மதுரத்தை குடித்த நீங்கள் ‘ஒன்றுமில்லாதவர்களுக்கு’ நீங்கள் பெற்ற நன்மையை, பங்கு வைத்து கொடுங்கள்! (நெகே.8:10). அன்று எருசலேமின் ‘அலங்கம் இடிபட்டுக் கிடந்ததை’ நெகேமியா கண்டதைப்போலவே, இன்றும் ‘சுவிசேஷ ஊழியம்’ அனேகரிடத்தில் இல்லாமல் போய்விட்டது! அலங்கம் செப்பனிடுங்கள்! ‘கிறிஸ்து பிறந்தார்’ என்ற சேதியை திக்கெட்டும் அறிவியுங்கள்! ஆமென்.
- ரத்னம்
