பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


16.12.2024

51. ‘தேவனுடைய நோக்கம்’ அறியத்தவறிய யோபுவின் மனைவி!

  ன் குடும்பம் கடும் சோதனைக்குள் சென்ற சமயம் யோபுவின் மனைவி, “தேவனைத் தூஷியும்!” எனத் தன் புருஷனிடம் குமுறினாள். தன் கணவன் மூலமாய் அவள் பெற்றிருந்த ஏராளமான ஆஸ்திகள், நன்மைகளின் காலத்தில், யோபுவின் மனைவி “தன் கணவனை” போற்றியிருப்பாள்! அவனுக்கு கீழ்படிந்து, தாழ்மையான பணிவிடையும் செய்திருப்பாள்! இன்றும் அப்படித்தானே, அனேகருடைய அன்பு, பொன் பொருளை சார்ந்து மாயமாய் உள்ளது! அது, நிபந்தனைக்கு உட்பட்ட மானிட அன்பு, தெய்வீக அன்பல்ல! ஆம், சோதனை நேரத்தில் அவள் பிரதிபலித்த துர்கிரியை துக்கமானதன்றோ!! தன் மாறுபாடான துர்கிரியையால் “தேவன் யோபுவுக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்” என்ற தனது எண்ணத்தை தீர்க்கமாக அறிவித்து, தனது செய்கையால் தன் புருஷனின் முதுகில் ஓங்கிக் குத்திவிட்டாள்!! 

 தன் கணவன் யோபு, ஓர் உத்தம நீதிமான் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆண்டவரே அதை ஆமோதித்து அறிவித்திருந்தார்! ஓர் நீதியுள்ள தேவன், தன் கணவனை ஒருபோதும் “தண்டிக்கவே முடியாது” என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும். இந்தப் பாடுகளின் மூலம் தேவன் ஏதோ ஓர் நோக்கத்தை தன் கணவனுக்காக விசேஷமாய் வைத்திருக்கிறார் என்றுதான் அவள் அறிந்திருக்க வேண்டும்!!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!