அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
யோபு 42:2-ல் “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்!” என கூறியது ஆஸ்தி இழப்பு! பிள்ளைகள் இழப்பு! சரீர சுக இழப்பு! போன்ற “துன்பத்தின் சகலமுமேயாகும். இத்தனை இழப்புகளை இழைத்திட சாத்தானுக்கு தேவன் அனுமதித்ததற்கு காரணம் 1)யோபுவின் உத்தம விசுவாசத்தை வெளிப்படுத்த 2) இவை அனைத்தையும் திருப்பித்தந்திட தேவனால் முடியும்! என்பதுமேயாகும். ரோமர் 8:28-ல் “அவரில் அன்புகூருகிறவர்களுக்கு ‘சகலமும் நன்மைக்கு’ ஏதுவாக நடக்கிறது” என்ற வசனத்தை யோபுவோடு ஒப்பிடுவது நமக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது! சகல ‘தீமைகளையும்’ தம்முடையவர்களுக்கு ‘நன்மையாக’ மாற்றி நடத்துவார்! இவ்வாறு மாற்றி, “அவர் செய்ய நினைப்பது ஒருபோதும் தடைபடாது!” (யோபு 42:2). அல்லேலூயா!