அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
02.12.2024
49. இன்று, தேவனுக்கு ‘மீதியானவர்களே’ பரிசுத்தர் கூட்டம்!
“ஒரு திரள் கூட்டத்தை அல்ல. குறைவான பக்தியுள்ள மக்களுக்கே தேவன் இன்றும் மதிப்பு தருகிறார்” என்பதை உணர்ந்து வாழக்கடவோம்.
“சீயோன் குமாரத்தி திராட்ச தோட்டத்திலுள்ள ஒரு குச்சு போலவும், வெள்ளரி தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முத்திரையிடப் பட்ட ஒரு பட்டணம் போலவும் மீந்திருக்கிறாள்! சேனையின் கர்த்தர் தமக்கென கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாமும் சோதோமைப் போலாகி கொமோராவிற்கு ஒத்திருப்போம்” எனக்கூறும் ஏசாயா 1:8,9 வசனங்களில் “மீந்திருக்கும்” வார்த்தையை கவனித்துப் பாருங்கள்!
இந்த உலக காலச்சக்கரத்தின் முடிவின் உச்சக்கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். அது, “தேவன் வழங்கும் நியாயத்தீர்ப்பு!” நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்பி வருவது தான். நாம் வாழும் இந்நாட்களிலேயே, இந்த உச்சக்கட்டமான நியாயத்தீர்ப்பு வரப்போகிறதென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் வந்து, தன்னுடைய ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கப் போகிறார்! சோதோமின் பாவங்களையும், சத்துருவாகிய பிசாசையும் ஒன்று சேர்த்து அழிக்கப் போகிறார். அவர் வரும் அந்தப் பொன்னாளில், பரலோகமே இறங்கி பூமிக்கு வந்ததாய் மாறிவிடும்! ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்!
- ரத்னம்