அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பாதுகாப்பாய் வாழ ‘ஏற்ற சமயத்தில்’ உதவிடும் அவரது மென்மையான இரக்கமே (கூநனேநச ஆநசஉநைள) நமது தேவை! (சங்.119:77). இயேசுவைப் பற்றிய நமது தினசரி தியான வாழ்க்கையில், கிருபாசனத்தண்டை கிட்டிச் சேர்ந்த வர்களுக்கு ‘பொதுவான தேவ இரக்கம்’ மாத்திரமல்ல..... இந்த ‘மென்மையான இரக்கத்தை’ தேவன் நாள்தோறும் தந்தருளுவார்! இந்த மென்மையான இரக்கத்தை, கிருபை என்றே புதிய ஏற்பாடு போற்றி அழைக்கிறது! (எபி.4:15,16). இந்த உலகம் பாராட்டும் சம்பத்துக்கள் யாதொன்றும் ஐஸ்வர்யம் அல்ல.... தெய்வ ஸ்நேகத்தில் ஒருவன் கண்டடையும் ‘இந்த கிருபையே’ மெய்யான ஐஸ்வர்யம்!!
இந்த மென்மையான இரக்கமே, சாலை விபத்தில் நம் கால் ‘சறுக்கும்போது....’ தாங்கிடவும், சோதனை வேளையில் நாம் பாவம் செய்து விடுவோமோ.... என்ற இக்கட்டில், நம்மை ‘வழுவாமல்’ காத்திடவும் வல்லது! ஆம், இந்த கிருபை மாத்திரமே எல்லாவற்றிற்கும் போதுமானது!!