அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தன்னுடைய இயலாமையை அல்லது ஏழ்மையை அறிந்து கொண்டவன் மாத்திரமே ஐசுவரியவானாய் மாறிட முடியும்! ‘தான் கைவிடப்பட்டவன்’ என்ற நிர்ப்பந்த நிலையை அறிந்தவன் மாத்திரமே ‘தேவனுடைய - சுவிகார தத்துபிள்ளையாய்’ மாறிட முடியும். பரலோகத்திற்கோ அல்லது சந்தோஷத்திற்கோ உள்ள வழியை நாமாக ஏற்படுத்திக்கொள்ள முடியாது! நம்முடைய பக்தி வாழ்க்கை நாமாக அமைத்துக்கொள்ள முடியாது!
எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், நம்முடைய ஜீவிய பாதையை நாமாக புதுப்பித்துக்கொள்ள முடியாது! நிறைவான சந்தோஷமும், தேவ பக்திக்குரிய யாதொரு இரட்சிப்பும், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் மாத்திரமே பெற முடியும். ‘நமது இயலாமையில்’ கர்த்தரிடம் தாழ பணியக்கடவோம்.... அப்போது அவர், பரலோகத்தின் ஆசீர்வாத பலகணிகளை நமக்காக நிச்சயம் திறப்பார்!