அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
10.06.2024
24. எந்த துன்பத்திலும், நாம் சோர்ந்து போவதில்லை!
இவ்வுலக மாந்தர்களுக்கு நாலாபக்கமும் நெருக்கங்கள் ஏற்படும்போதும், ஒடுங்கிப்போய், மனமுறிவு அடைந்து விடுகிறார்கள்! அல்லது, பலரால் புறக்கணிக்கப்படும் துன்பம் ஏற்படும்போது, தாங்கள் கைவிடப்பட்டதைப்போல் வேதனை அடைகிறார்கள்! இன்னும் அதிகமாய் கீழே தள்ளப்படும் அவமானங்கள் ஏற்படும்போது, மடிந்தே போகிறார்கள்!
ஆனால், இவை அனைத்தும் ஓர் உத்தம கிறிஸ்தவனுக்கு நேரிடும்போது, அவன் உலக மாந்தர்களைப்போல், மனமுறிவு அடைவதில்லை! கைவிடப்படுவதில்லை! நம்பிக்கை இழந்து மடிந்து போகிறதும் இல்லை! என, 2கொரி.4:8,9 கெம்பீரமாய் கூறுவதைப் பாருங்கள். ஏனெனில், இந்த எல்லா சமயங்களிலும் நாம் பெற்ற “தேவ இரக்கம்” நம்மை சோர்ந்துபோகச் செய்வதில்லை என்றும், துன்பங்கள் அனைத்தும் அவனுக்கு ‘புறம்பே’ சம்பவித்தாலும், அவனது ‘உள்ளான மனுஷனின்’ மனம் முறிவடைந்து போவதில்லை எனவும் அமைதி காண்பான், உத்தம கிறிஸ்தவன்!
- ரத்னம்