அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

10.11.2025
45. ‘கிறிஸ்து செய்து முடித்த கிரியைகள்’ நம்மில் பலன் தரட்டும்!
நான் மனம்புண்பட்டுவிட்டு அல்லது கோபமடைந்து விட்டு, “இனி பிழைத்திருப்பது நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” என அறிக்கை செய்வேனென்றால், “பாவம் செய்தது கிறிஸ்துவே!” என நான் கூறுவதாகப் பொருள்படும். இது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத பிதற்றல்! இவ்வுலகில் பூரணமான வெற்றி வாழ்க்கை வாழ்பவர்கள் யார் தெரியுமா? கேளுங்கள்! விசுவாசத்தினால், கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டு “இனியும், தான் பிழைத்து” வாழாதவர்கள் எவர்களோ, அவர்கள்தான்!!
நீங்கள் இந்த உன்னத ஸ்தானத்திற்குள் பிரவேசித்து, தேவ கிருபையினால் நிலைத்து நிற்பதுதான் எத்தனை அருமையானது! அதிசயமான நமதாண்டவர் தம் மிகுந்த இரக்கத்தின்படி, நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி, அவர் செய்து முடித்த இந்த உன்னத இடத்திற்கு அழைத்தாரே! அது அப்படியே நம்முடைய ஜீவியத்தில் நிறைவேறும்படி பலத்த கிரியையும் செய்கிறாரே, இது அற்புதம்!! (1தெச.5:23-24).
- ரத்னம்
