அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
24.03.2025
12. ‘ஆராதனை பயபக்தி’ இழக்காதீர்கள்!
ஒரு விக்கிரக பக்தன் பணிந்துகொள்ளும்போது, தன் மேல் வஸ்திரத்தை எடுத்துத் தன் அறையில் கட்டி, வாய்பொத்தி, கை உயர்த்திக் கும்பிட்டு, சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்குகிறான். அவ்வளவு பயபக்தி கூட நமக்கில்லையோ?! ஜனங்கள் ஆராதனைக்கு வருகிற விதத்தையும், அவர்கள் ஆசனங்களில் உட்கார்ந்திருக்கிற மாதிரியையும், அவர்கள் கண்கள் அங்குமிங்கும் நோக்கு வதையும், அவர்கள் எண்ணங்கள் பல காரியங்களில் செல்லுவதையும், பக்கத்திலிருப்பவர்களோடு முனுமுனுத்துப் பேசுவதையும் சிரிப்பதையும் கவனித்தால், இதன் உண்மை விளங்கும். பயபக்தி அற்றுப்போய், தேவசமூக உணர்ச்சி யில்லாமற்போனால் நீங்கள் ஆண்டவருக்குப் பிரியமான ஆராதனை செய்ய முடியாது.
- ரத்னம்