பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


24.11.2025

47. நமது அர்ப்பண வாழ்வு, புதுப்பிக்கப்படுவதாக!

 ருடத்திற்கு ஒருமுறை ஜான்வெஸ்லியின் தலைமையிலான ‘மெத்தடிஸ்ட் சபை’ ஜனங்கள் கூடிவந்து, தாங்கள் தேவனோடு கொண்டிருக்கும் அர்ப்பண வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளுவார்கள்! 1755-ம் ஆண்டு கூடிய “தேவனோடு உடன்படிக்கை” ஆராதனையில் ஜான்வெஸ்லியும் இருந்தார். அந்த அர்ப்பண உறுதிமொழி, நம் யாவருக்கும் உரித்தாகுக: 

“இனியும் நான் எனக்குச் சொந்தமானவனல்ல, உமக்கே நான் சொந்தம்! 

நீர் விரும்பும் சூழ்நிலைகளில் என்னை நீர் வைத்தருளும், 

எவர்களோடு சேர்த்து வைக்க விரும்புகிறீரோ, அவர்களோடு என்னைச் சேர்த்து வைத்திடும்! 

மகத்துவ காரியங்கள் செய்திட வைத்திடும், அல்லது பாடுகள் நிறைந்த வாழ்விலும் வைத்திடும்! 

உம் பணியில் துரிதமாய் இருக்கவோ அல்லது யாதொன்றும் செய்யாதிருக்கவோ வைத்திடும், உமக்காக உயர்த்தப்படவோ அல்லது உமக்கா தாழ்த்தப்படவோ வைத்திடும்!

சம்பூரண நிறைவிலும் அல்லது எல்லாம் இழந்த வெறுமையிலும் வைத்திடும், 

எல்லாம் எனக்கு உண்டாயிருக்கவோ அல்லது எல்லாம் இழந்து நிற்கவோ வைத்திடும்! 

எனக்கென்று என்ன வேண்டும்?....என்னையே உமக்கென்று முழு இருதயமாய் தந்துவிட்டனே! இனி, எல்லாம் உம் விருப்பம் அல்லது உம் தீர்மானம்... 

அது எதுவானாலும், அதுவே என் பாக்யம்!! 

மகிமை பொருந்திய என் பிதாவாகிய தேவனே, நேச குமாரனே, தூய ஆவியே

நீரே என் சொந்தம், நான் உம் சொந்தம்! அது அப்படியே ஆகட்டும்! 

இன்று இப்பூமியில் நான் செய்திடும் இந்த உடன்படிக்கை பரலோகத்திலும் 

அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதாக! ஆமென்.”

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!