அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பிறருக்கு நன்மைத்தரும் பால் நிறைந்த ஓர் வெண்கல பாத்திரம் அல்லது அன்பென்னும் நற்குணத்தால் நிறைந்தவர்கள் ‘ஓசை’ படுவதேயில்லை! எத்தனை நெருக்கங்கள் மோதினாலும் அதில் ‘ஓசையான’ ஆத்திரங்கள் எழுவதில்லை! ஏனெனில், அவர்களின் பாத்திரம் அன்பினால் நிறைந்திருக்கிறது!!
உள்ளே தங்கள் இருதயத்தில் அன்பற்ற “வெறும் பாத்திரம்” கொண்டவர்கள், எவ்வளவுதான் “தூதர் பாஷை” போன்ற தேவபக்தியான வார்த்தைகளைப் பேசினாலும்.... அது, வெறும் “வெண்கல ஓசையாகவே” இருக்கும்! என 1கொரி.13:1 நம்மை விழிப்பூட்டுகிறது! ‘அனுதினமும்’ தன் சிலுவை எடுத்து, சுயத்தை வெறுத்து வாழ்பவனே, தன் இருதயத்தை அன்பென்னும் தெய்வ நற்குணத்தால் நிறைத்திடுவான்! இனியும் ‘வெறுமையில்’ காலத்தை வீணாக்காமல், சிலுவையின் பாதையில் உண்மையாய் நடந்து, நம் இருதயத்தை தெய்வ அன்பினால் நிறைத்திடுவோமாக!!