அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
30.12.2024
53.‘நொறுங்கி வாழாமல்’ ஜீவன் இல்லை, பிறருக்கும் ஜீவன் இல்லை!
தேவன் மெய்யாகவே “நொறுங்கியவைகளை மாத்திரமே” பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஒரு சிறு பையன் தந்த அப்பத்தை இயேசு பிட்டார் அல்லது நொறுக்கினார்! அதன் பின்புதான், அந்த நொறுங்குண்ட அப்பம் திரளான ஜனங்களைப் போஷித்திட முடிந்தது. அதேபோல், நளதப்பெட்டி உடைந்த பிறகுதான் “சுகந்த வாசனை” புறப்பட்டு சென்று அந்த வீடு முழுவதையும் சுகந்த வாசனையால் மணக்கச் செய்தது. இயேசு கூறும்போது “இது உங்களுக்காக பிட்கப்படும் அல்லது நொறுக்கப்படும் என்னுடைய சரீரம்!” எனக் கூறினார். இதுதான் நம்முடைய எஜமான் சென்ற வழியாய் இருந்தால், அவருடைய ஊழியக்காரராகிய நாமும் அதே வழியில் நடக்க வேண்டுமல்லவா? இதற்கு மாறாக நம் ஜீவனை, நாம் பத்திரமாய் வைத்திருக்க நாடுவோமென்றால், அந்த நம் ஜீவனை இழப்பது மாத்திர மல்லாமல், இன்னமும் இரட்சிக்கப்பட வேண்டிய ஜனங்களின் ஜீவனையும் நாம் இழந்து விடுவோம்!
- ரத்னம்