அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

08.06.2026 துளிகள் - 23
பரலோக ராஜ்யம் நடத்தும் ‘துன்பங்களுக்காக’ இனி புலம்பல் இல்லை!
‘உபத்திரவங்களும் பரீட்சைகளும்’ வேதாகமத்தில் நிறைய உள்ளன! நான் மாத்திரம் அல்ல, நம் எல்லோருடைய ஜீவியத்திலும் இவைகள் அதிகமாகவே உள்ளன. ஏனெனில், “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்(Must)” என்றே வேதம் திட்டமாய் கூறுகின்றது(அப்.14:22)
தேவனுடைய வார்த்தை, நம்மை செம்மையான பாதைக்கு வழி நடத்தும் நல்ல வழிகாட்டியாகும்! ஆகவே, தேவனுடைய வார்த் தைக்கு வேறு விதமாய் வியாக்கியானம் கொடுத்து ஒருக்காலும் பாதை தவறி சென்றுவிடாதீர்கள். இங்கே கவனம் கொள்வீர்!.... திரளான உபத்திரவங்களும், பரீட்சைகளும் ‘தேவனுடைய ராஜ்யத் திற்கே’ நம்மைத் தகுதிப்படுத்துகின்றன! அப்படியானால் என்ன? இனி எந்த துன்பத்திற் காகவும் புலம்பிட மாட்டோம்!” என்ற நற்செய்தி நமக்கு சொந்தமாகிட முடியும்!
- ரத்னம்
