அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
அன்று பெத்தானியா ஊர் மரியாள், வியாதிப்பட்ட தன் சகோதரன் லாசருக்காக விண்ணப்பம் செய்து, இயேசு புறப்பட்டு வந்து சேர 4- நாட்கள் ஆகிவிட்டதே! அவனும் மரித்து, கல்லறையில் வைக்கப்பட்டான்! மரியாள் ஓடி வந்து “நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டானே!” என அங்கலாய்த்தாள்! (யோவான் 11:3,32).
இன்றோ, அவர் மரணத்தை வென்று, உயிர்த்தெழுந்தார்! இயேசுவை ‘விசுவாசித்து’ ஜெபித்திடும் ‘வியாதிப்பட்ட உங்கள் அன்பிற்குரியவர்களை’ 4-நொடியில் வந்து சுகமளிப்பார்! புயல்வீசும் உங்கள் சூழ்நிலைகளிலிருந்து உங்களை காத்திட, இனி கடலின்மேல் நடந்து வரவேண்டியதில்லை! உங்கள் ஜெபம் கேட்டு, உடனே அமைதிப்படுத்துவார்! ஏன் தெரியுமா? நம் இரட்சகர் ‘ஜெயமே ஜெயமென’ எழுந்தார்! பூட்டிய வீட்டிலிருந்து ஜெபித்தாலும், உடனே கேட்டு சஞ்சலம் நீக்குவார்! ஏன் தெரியுமா? எழுந்தார் இறைவன்! அல்லேலூயா.