பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
06.02.2023

6.‘இன்று’ சந்திக்கும் துன்பத்தில் வெற்றி காணுங்கள்!

கெத்சமனே, கைது, பேதுருவால் மறுதலிக்கப்படுதல், சிரசில் முள்முடி, பார சிலுவை, வஸ்திரம் உரிந்து அவமானம், கள்வர்களோடு கள்வராக நிந்தை, பரிகசிப்பு..... என்றெல்லாம் துன்பங்கள் குவிந்த யோவான் 18,19-ம் அதிகாரத்திற்கு முன்பு உள்ள அதிகாரம் 17-ல் இயேசு கூறிய அற்புதமான ஓர் சத்தியம் அறிவீர்களா? இத்தனை துன்பங்களுக்கும் நடுவில் “ஜெய வீரனாய்...... ராஜாவாய்” இயேசு நின்றதற்கு ஆதாரமும் இரகசியமுமாய் இருப்பதே இந்த வசனமாகும்! 

ஆம், கேளுங்கள்: “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோவான்17:24) என்பதே அந்த ஆச்சரியமான வசனமாகும்! இவ்வாறு, உலகத்தோற்றத்திற்கு முன்பே நீர் என்னில் அன்பாயிருக்கிறீர் என பொதுவாய் கூறுவதில் எந்தப் பொருளும் இல்லை! வசனங்களைப் “பொதுவாய்” எடுத்துக்கொளவ்தற்கு கிறிஸ்தவர்களை சாத்தான் தாராளமாக அனுமதிக்கிறான். ஆனால், அன்றாட தங்கள் வாழ்க்கைக்கு “குறிப்பாய்” வசனங்களைப் பயன்படுத்துவதையே அவன் வெறுக்கிறான்! 

“உலகத்தோற்றத்திற்கு முன்பே......” என்ற பொது அறிக்கை அல்ல..... இதோ, ‘இப்போது’ வரப்போகும் கைது, பாரசிலுவை, முள்முடி...... நிந்தை, அவமானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்பே நீர் என்னில் அன்பாயிருக்கிறீர்! என்பதே அந்த விசுவாச தைரியத்தின் இரகசியமாகும்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!