அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தேவன் மீது கொண்ட நேசத்தின் தழலை, அனல் குன்றாது பாதுகாப்பவனே (ஞசநளநசஎந) உத்தம கிறிஸ்தவன்! அவர்களையே கர்த்தரும் ‘பாதுகாப்பேன்’ (ஞசநளநசஎந) என வாக்குரைத்தார்! (சங்.145:20) திரண்ட தண்ணீரும், பெருவெள்ளமும் போன்ற பஞ்சமோ, பட்டயமோ, மரணமே யானாலும் தன் இரட்சகர் இயேசுவின் மீது கொண்ட சினேகத்திற்கு சிறிதும் பங்கம் வராமல் காத்தவர்களே “நேச வைராக்கியம்” கொண்டவர்கள் (உன்.8:6). லாசரு என்ற இயேசுவின் பக்தன் வியாதி கொண்டான், மரித்தும் போனான்! ஆகிலும் இயேசுவின் மீது கொண்ட சிநேகத்தில் சிறிதும் பங்கம் வராது ‘நேசத் தழலை’ பாதுகாத்த அவனை ...‘நமது சிநேகிதன்!’ என இயேசு அழைத்து மனம் உவந்தார்! இவ்வாறு, மரணம் சம்பவித்தும் சினேகம் குன்றா அவனை ...புதைத்து நாலு நாட்களுக்குப் பிறகு ‘உயிரோடு எழுப்பி’ பாதுகாத்தார்! ஆ, அவரது சினேகத்தின் உத்தமம் பெரிது, மாபெரிது! (யோவான்.11:3,11,36).