அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
எசேக்கியேல் 44-ம் அதிகாரத்தில் நாம் காணும் தரிசனத்தின்படி, ஆலயத்திலிருந்து கடந்து வந்த ஜீவ நதியின் ஆழத்தை முதலாவது அளந்தபோது ‘கணுக்கால்’ அளவே இருந்தது. இன்னும் சற்று ஆழத்திற்குள் சென்றபோது ‘முழங்கால்’ அளவு இருந்தது. அதை அடுத்த ஆழத்திற்குள் சென்றபோது ‘இடுப்பளவு’ இருந்தது. அதையும் கடந்து ‘நீச்சல் ஆழத்திற்குள்’ வந்துவிடுகிறோம்! பின்பு அந்த நதி, யாராலும் அளக்க முடியாத, பிரகாசமாய் பாய்ந்திடும் நதியாய் மாறிவிட்டது!
இந்த நீச்சல் ஆழத்தில் மண்ணுக்குரிய வாழ்க்கையில், ‘தன்னை’ முற்றிலுமாய் அழித்தவனையே பரிசுத்த ஆவியானவர் தேடுகிறார்! கணுக்கால் ஆழமோ, முழங்கால் ஆழமோ இடுப்பளவு ஆழமோ மாத்திரமல்ல! ‘அவனையே முற்றிலும் இழுத்துக் கொள்ளும்’ ஆழம்! இதுவே நாம் சென்று அடைய வேண்டிய ஆழத்தின் இலக்கு!! எவ்வளவு ஆழத்திற்குள் சென்றீர்கள்? என்ற அளவுகோலை வைத்திருக்கும் தேவன், நம் அருகிலேயே இருக்கிறார்! இதை அறிந்தவர்களாய், இப்போது இருக்கும் ஆழத்தைக் கடந்து, மூழ்கும் ஆழத்திற்குள் போவோமாக! அதுவே, நாம் கிறிஸ்துவுக்குள் அடைந்திட வேண்டிய சம்பூர்ண ஆசீர்வாதம்!
- ரத்னம்