பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


06.05.2024

19. கூட்டி குறைத்து பேசுவது, தீமை!

 ள்ளதை உள்ளது!  இல்லதை இல்லது!  என பேசுவதற்கு பதிலாய் ‘அதை மிஞ்சி’ கூட்டிக் குறைத்துப் பேசுவது, தீமை மாத்திரம் அல்ல.... அது தீயோனிடமிருந்து (பிசாசிடமிருந்து) தோன்றுவதேயாகும் என மத்தேயு 5:37 ஆணித்தரமாய் கூறுகிறது.

  இயேசுவின் இந்த வார்த்தைகளில் உங்களின் மானிட ‘காரணங்களைப்’ புகுத்தாமல், நீங்கள் முழு மனதாய் விசுவாசித்து விட்டால்..... அங்கு பாருங்கள்! உங்கள் கண்முன் மலைபோல் குவிந்து கிடக்கும் பாவங்களை நீங்கள் நிச்சயமாய் தவிர்த்திருக்க முடியும். அவ்வாறு தவிர்த்திருந்தால், கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நியாயத்தீர்ப்பு நாளில் “வீண்வார்த்தைகளைப் பேசின” உங்கள் கணக்கில் யாதொன்றும் இல்லாதிருக்கும் விந்தை காண்பீர்கள்! யாதொரு கவனமும் இல்லாமல், வாயில் வந்ததைப் பேசி தீர்த்தவர்களே, தெய்வபயம் அற்றவர்கள்! இவர்களே, கர்த்தருக்கு கணக்கு ஒப்புவித்திட வேண்டும்!

 சபையின் சகோதரர்கள் மத்தியிலும், பொய் பேச்சா? தேவனுடைய பிழையேதும் இல்லாத ஜீவ வார்த்தைக்கு அசட்டையா? அவமதிப்பா?

 இனியாவது, தேவ கிருபையை பற்றிக் கொண்டு, ஆர்ப்பரிக்கும் நெஞ்சத்தோடு குதித்தெழுந்து, துரிதமாய் ஓடி ஒப்புரவாகுங்கள்! இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானது! பொய் பேச்சிற்கு ஒப்புரவாகும் நடவடிக் கைகளை தள்ளிப் போடாதிருங்கள்! செயல்.... அதை இப்பொழுதே தீவிரப் படுத்துங்கள்!  தாமதித்து வி இனி நமக்கு நேரமில்லை!!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!