அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
17.02.2025
7. பரிசுத்தாவி உங்களில் தங்கியிருப்பாராக!
திருச்சபையில் ஆவியானவர், வீண் சடங்காச்சாரங்களையும், பயனற்ற மார்க்க வெளி ஆச்சாரங்களையும், செத்த கிரியை களையும், பாவமாம்சத்தையும், சுயத்தையும், உலகத்தையும் முற்றிலுமாய் ‘மரணத்திற்கு’ ஊற்ற சொல்லுகிறபடியால், அவரை விரும்பாமல் சபையிலிருந்தே அவரை வெளியே துரத்தித் தள்ளி விட்டிருக்கின்றார்கள். பரிசுத்தம் நிறைந்த இடத்தில், அசுத்தம் உள்ளே வர விரும்பினால், தனக்கு ஆதரவாக இன்னும் ஏழு அசுத்த ஆவிகளை தன்னோடு சேர்த்துக்கொண்டு, பரிசுத்தத்தை வெளியே தள்ள முயற்சிக்கும் என்பது மிக தெளிவு! ஆனால், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு எத்தனை தீராத அவசிய மானவர்! தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவர் எத்தனை தேவையானவர்! அவரின்றி ஜீவியம் ஏது? ஊழியம் ஏது? ஓ, உன்னதத்தில் வாசம் செய்திட வேண்டிய தாசனே, ஓ அருமை சபையை ‘பரிசுத்தாவியை இழந்து’ உன்னதத்திலிருந்து இறங்கி, இந்த மண்ணில் சிக்கிவிடாதே, கவனம்!!
- ரத்னம்