அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
24.06.2024
26. ‘அன்பின் பிரமானத்தோடு’ நம்மை சந்திக்கும் தேவன்!
நானூரு வருஷமாய் தீர்க்கதரிசிகளின் சத்தம் கேட்டதில்லை என்ற நிலையில்: திடீரென யோவான் ஸ்நானகன் ‘வனாந்திரத்தில் தொனிக்கும் சத்தமாய்’ புறப்பட்டபோது, ஜனங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்! யோவான் ஒரு அற்புதமும் செய்யாதிருந்தும், இடிமுழக்கம்போன்ற அவர் வார்த்தையை கேட்க தேசமே புறப்பட்டு வந்தது! யோவான் ஸ்நானகனின் சிரச்சேதத்திற்குப் பிறகு, நமதாண்டவர் எழும்பினபோதும், இயேசுவின் உபதேசத்தைக் கேட்கும்படி திரளான ஜனங்கள் அவரைப் பின் சென்றதும் ஆச்சரியமல்ல!
மோசேயின் பிரமாண விதிகளைத் தாங்கக்கூடாமல், யூதர்கள் தள்ளாடினதுபோல, கிறிஸ்துவின் பிரமாணங்களையும் கைக்கொள்ளக்கூடாமல் நாம் கலங்காதிருக்கவே இயேசு விரும்பினார்! ஆகையால், அவர் அநேக சட்டங்களையும் விதிகளையும் ஏற்படுத்து கிறவராய் வராமல், அன்பென்னும் கட்டினால் நம்மைக் குணமாக்கவே வந்தார். ஆவிக்குரிய அந்த அன்பின் பிரமாணமே, அவர் வழங்கிய சகல கற்பனைகளுக்கும் மூல சித்தாந்தமும் ஆதாரமுமாயிருக்கிறது!
- ரத்னம்