அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
28.10.2024
44. விலையேறப்பெற்ற அவரது, மாறாத கிருபை!
மகா கிருபை நிறைந்தவர் நம் ஆண்டவர் இயேசு! இந்த உலகத்தின் மனுக்குலம் அனைத்துமே அவரது அன்பான செட்டைகளின் நிழலில்தான் வாழ்கிறார்கள்! அவர்கள் தீயோரா யிருந்தாலும், நல்லோராயிருந்தாலும், ‘மனுப்புத்திரர்’ அனைவரையும் அன்புகூர்ந்து காப்பதை ‘தேவனின் அருமையான கிருபை’ என்றே வேதம் கூறி வியக்கின்றது! (சங்.36:7).
ஆகிலும், அவர் மானிடர் எல்லோர்மீதும் காண்பித்திடும் கிருபையை “கிருபை, கிருபை” என வெறுமையாய் கொண்டாடிச் சென்று விடாதீர்கள்! 10-ம் வசனம் குறிப்பிடும் “உம்மை அறிந்த வர்கள் மேல் உமது கிருபை” என்ற தனிப்பட்ட பாக்கியமே பேரின்ப நித்தியானந்தம்! அது, அவரே நம் மேய்ப்பனாய் நின்று நடத்தும் “நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்” தொடரும் நிலைத் திருக்கும் கிருபை! (சங்.23:6). சத்துருக்களோ, மரண இருளோ போன்ற யாவற்றிலிருந்தும் காத்திடும் போதுமான அந்த கிருபை, கர்த்தரை தன் சொந்த மேய்ப்பராய் பெற்றவர்களுக்கே அருளப் படுகிறது! இந்த பாக்கியமே, நமக்கும் சொந்தமாய் மாறக்கடவது!
- ரத்னம்