அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘இன்று அனேக விசுவாசிகள், வாழ்வின் பல்வேறு கடின சூழ்நிலைகளில், தங்கள் விசுவாசத்தில் தடுமாற்றம் அடைகிறார்கள்! ‘விசுவாசமே’ இந்த பூமியில் தேவன் நமக்கு ஒப்புவித்த பாதுகாப்பான ‘வாசஸ்தலம்!’ என யூதா.5 எடுத்துரைக்கிறது!
தூதர்களேயானாலும், இந்த வாசஸ்தலத்தின் மேன்மையை காத்துக்கொள்ளத் தவறியதால் சோரம்போய் வீழ்ச்சியடைந்தார்கள்! என யூதா எச்சரித்தார். பல்வேறு துன்ப சூழ்நிலைகளில், அதி முக்கியமானது ‘அந்த சூழ்நிலை’ மத்தியில் நம் விசுவாசத்தை காத்துக்கொள்ள, தைரியமாய் போராடி பரிசுத்தாவியில் ஜெபிப்பதே யாகும்! இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மகா பரிசுத்த விசுவாசமே நம்மை கிறிஸ்துவுக்குள் வழுவாதபடி காக்க வல்லமை கொண்டது, என யூதா அறிவித்தார்! (யூதா.3,20-29).