அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
அவரது சொந்த ஜனங்களின் ‘கண்ணீருக்குப்’ பின்னால் ‘மகிழ்ச்சியின்’ கெம்பீர அறுவடை உண்டு! அதன் இரகசியம் என்ன? சங்கீதம் 126:6 அதை வெளிப்படுத்துகிறது: ஆம், அவர்கள் காரிருள் சூழ்நிலைக்குள் அழுதுகொண்டு போனாலும், கூடவே விதைப்பதற்கு ‘வாக்குத்தத்த வசனங்களும்’ ‘விசுவாசமும்’ மாறாத ‘தேவ கிருபையையும்’ அள்ளித் தூவி முன்சென்றார்கள்! அவர்கள் ‘விதைத்த’ அத்தனையும் தேவனுடைய பார்வையில் நித்திய மதிப்புடையவைகள்! ஆகவே, அந்த விதைகள் வெறுமையாய் திரும்பாமல் கெம்பீர அறுவடையை அவர்களுக்கு மீட்டுத்தந்தது! ஆம், துயர சூழ்நிலை முடிந்து அவர்கள் திரும்பி வந்தபோது “திரளான ஆசீர்வாதங்களை” சுமந்து வந்து கெம்பீரித்தார்கள்! இனியும், உங்கள் கண்ணீரின் மத்தியில் “விதைகளை” சுமந்து செல்ல மறவாதீர்கள்! வாக்குதத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்! நிச்சயமாய் கெம்பீர அறுவடையைத் தருவார்!!