அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
29.04.2024
ஒரு உத்தம விசுவாசிக்கு, தேவனுடைய வழி குறுகலாகி நெருக்கமாய் மாறிடும் நிலை ஏற்பட முடியும்! விவரிக்க முடியாத துன்பத்திற்குள்ளும் அவன் சென்றிட முடியும்! அந்த நிலையில், அவனால் பின்னால் போகவும் முடியாது, முன்னேறிச் செல்லவும் முடியாது! அவனுடைய வலதுபுறமும் பூட்டப்பட்டு, அவனுடைய இடதுபுறமும் பூட்டப்பட்டிருக்கும்! அவன் இப்போது செய்ய வேண்டியது என்ன? இந்த சரியான தருணத்தில்தான் எஜமானாகிய ஆண்டவரின் வார்த்தை “நீ நின்று கொண்டிரு!” என கட்டளை பிறப்பிக்கிறது.
‘இச்சமயங்களில்’ நம்பிக்கை இழக்கும் இந்த உலகமாந்தர்கள் “இனி பிரயோஜன மில்லை, உன் விசுவாசத்திலிருந்து வழிவிலகி, மடிந்து போவாயாக!” என்றே உரைப்பார்கள். ஆனால் தேவனோ, தம்முடையவர்களுக்கு உற்சாகமான தைரியத்தை தந்து, இப்படிப்பட்ட மோசமான நிலையிலும் “உன்மீது நான் வைத்த அன்பில் களிகூருவாயாக! என்றும், என்னுடைய உத்தமத்தில் நிலைத்திருந்து மகிழ்ந்திருப்பாயாக!” என்றுமே கனிவுடன் கட்டளையிடுவார்!
- ரத்னம்