அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தேவன் வாசம் செய்திடும் உங்கள் வீடு அல்லது அவரது சபை ஆகிய இரண்டு இடங்களுமே ஜீவியத்திற்கும், ஊழியத்திற்கும் பிரதான ஸ்தலமாகும்! அங்கு தேவனுடைய சமாதானத்திற்கோ, கர்த்தரின் மகிழ்ச்சிக்கோ அல்லது கர்த்தருடைய பரிசுத்தத்திற்கோ ‘குலைச்சல்’ ஏற்படும்போது, அதை நாமே சரிசெய்திட முயல்வது அற்பமானது மாத்திர மல்ல.... அகந்தையான செயலுமாகும்! ‘அந்த தடுமாற்றத்தை’ கர்த்தரே சரிசெய்திட அவர் முன் பணிந்து வேண்டி நிற்பதே ஏற்புடையதாகும்!
இதற்கு மாறாக, தன் ‘வீட்டிலிருந்து’ புறப்பட்ட உடன் படிக்கை பெட்டியின் ‘தள்ளாட்டத்தைத்’ தானே சரிசெய்திட கரம் நீட்டிய ‘ஊசாவை’ கர்த்தர் வன்மையாய் கண்டித்தார் என 2சாமு.6:4-7-ம் வசனங்களில் காண்கிறோம்! அதை “எனக்கு மிஞ்சின காரியத்தில் தலையிடும் அகந்தை” என்றே சங்கீதம் 131:1 கூறுகிறது! நாமோ, நம்மை தாழ்த்தி, அந்த சூழ்நிலை முதல் தொடங்கி கர்த்தரையே நம்பியிருப்பதுதான் மேலான ஜெயமாகும்! (சங்.131:3).