அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“பரம பிதாவானவர், தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் ‘பரிசுத்த ஆவியை’ கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்றார் இயேசு (லூக்.11:13). பார்த்தீர்களா? பொல்லாத தகப்பன் தரமுடியாத பரிசுத்த ஆவியையும், தேவ ஐக்கியத்தையும், தேவனுடைய ராஜ்யமாகிய நீதி, சமாதானம், சந்தோஷத்தையும் கேளுங்கள்..... அதை அவர் நிச்சயமாய் கொடுப்பார்! ஆனால், அவர் நிச்சயமாய் கொடுப்பதாக வாக்குரைத்த திவ்ய காரியங்களை வாஞ்சித்து கேட்கத்தான் இன்று கேட்பாரில்லை! சுயநலமற்ற அன்பை கேட்பாரில்லை..... சொந்த குமாரனையே நமக்காக ஒப்புக்கொடுத்த பிதாவிடம் (ரோமர் 8:32) அவர் குமாரனின் சாந்தகுணத்தை, தாழ்மையை கேட்பாரில்லை! இவ்வாறு, இயேசுவின் திவ்விய குணங்களை வாஞ்சித்து ‘பரிசுத்தாவியை’ ஜெபத்தில் கேட்டவர்கள்..... ‘நிச்சயமாய் பரிசுத்தாவியை பெற்று’ நித்திய ஜீவனை பரிபூரணமாய் பெறுவது ‘அதிக நிச்சயம்!’