அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

20.10.2025
42. எனக்கென்று ‘கொஞ்சம்’ ஒளித்திருப்பது, தெய்வ அன்பு அல்ல!
நானோ, ஒரு சமயத்தில், என்னுடைய சொந்த நிர்ப்பந்த நிலையை காணும்படி கர்த்தர் கிருபை செய்தார். சில சூழ்நிலைகளில், சிலவற்றைக் குறித்து, எனக்கென்று ஒரு விருப்பதை என் உள்ளம் வைத்துக்கொண்டதை நான் கண்டறிந்தேன். என் ஆண்டவர் இயேசுவோ, என்மீது கொண்ட மிகுதியான அன்பினிமித்தம் தன் முழுமையையும் எனக்காக ஒப்புக்கொடுத்தவர் அல்லவோ! அவ்வாறே பிதாவாகிய தேவனும் ‘தன் நேசத்திற்குரிய’ ஒரேபேறான குமாரன் என்றும் பாராமல், அவரைத் தந்தருளி என்னை முழுமையாய் அன்புகூர்ந்ததும், விந்தையல்லவோ!
ஆனால், நானோ என்னை முழுவதும் கர்த்தருக்கு ஒப்புவிப்பதில் கொஞ்சம் விருப்பத்தை என் மனதில் மிச்சம் பிடித்து வைத்திருக்கிறேன் என்பதை கர்த்தர் சுட்டிக் காட்டினார்.அதிகபட்சம் கொடுத்துவிட்டு, அந்த கொஞ்சத்தை எனக்குள் வைத்திருப்பது தெய்வ அன்பு அல்ல எனவும் போதித்தார்!
- ரத்னம்
