அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
02.09.2024
36. இயேசு வழங்கும் ‘உள்ளான அமைதி!’
இயேசு கற்றுக்கொடுத்த போதகத்தில் “இரண்டு அமைதியை” சுட்டிக்காட்டினார். முதல் அமைதி ‘இரட்சகரின் இருதயத்தில்’ தங்கியிருந்த அமைதி! இரண்டாவது அமைதி, தன் வார்த்தையின் மூலமாய் ‘புயல் வீசும் கடலில்’ அவர் சிருஷ்டித்த அமைதி! இதுவே நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடமாகும். முதலாவதாக, ஆண்டவரிடத்தில் இருந்ததைப் போலவே ‘நமக்குள்ளும் அந்த ஆச்சரியமான அமைதி’ வாசம் செய்ய வேண்டும். இந்த அனுபவபூர்வமான உண்மைதான், இயேசுவைச் சுற்றியிருந்த கொடிய சூழ்நிலைக்கு அமைதியை கொண்டு வந்தது! இயேசுவுக்குள் இருந்தது எதுவோ, அதுவே அவருக்கு வெளியேயும் சம்பவித்தது! கிறிஸ்துவுக்குள் அமைதி காணப்பட்டபடியால், வெளியே இருந்த மற்றவர்களுக்கும் அமைதி உண்டானது. “இந்த உள்ளான அமைதி” மிகுந்த ஆச்சரியமல்லவா? “அவர், படகின் அடித்தட்டில், ஓர் தலையணையில் சாய்ந்து அமைதியான நித்திரையில் இருந்தார்” என்றே வேதம் இயேசுவை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
- ரத்னம்