அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
03.03.2025
9. பூகம்பமா? ‘மலை புரண்டு’ சமபூமியின் அழகைப் பாருங்கள்!
ஒரு பூகம்பத்தைக் கொண்டு ஒரே நாளில், பல மைல்கள் கொண்ட விஸ்தாரமான இடத்தை, மலைகளைப் புரட்டி தேவன் உழுதுபோட்டாரே! ஆழமான அவரது உழவுசால் அழகிய சமபூமியை காணும்படி செய்தது விந்தையல்லவோ! மலைகள் புரண்டு, சமவெளியாய் மாறிவிட்ட பின்னணியில் “தேவனுடைய சமாதானம் நித்தியத்திற்கும் நிலை நிற்குதே” என்ற குரலை ஒலித்து புதையுண்ட மலையின் ஆனந்த சத்தத்தை கேட்க முடிந்தது!
தேவன் பொழிந்த கிருபையின் ஸ்தலமாகவே நான் அந்த ‘மலைப்பாங்கான’ ஸ்தலத்தை இப்போது காண்கிறேன். இதமான காலை மகிழ்ச்சியும், மனதை மயக்கும் செந்நிற சூரிய கதிர்களும், ‘அந்த பூகம்ப ஸ்தலத்தை’ பரலோகத்தைப் போல் மாற்றியிருந்தது! இதுவே நாம் யாவருடைய ஜீவியத்திலும் நிலைத்திருப்பதாக!
- ரத்னம்