அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
29.07.2024
31. புறங்கூறுவது, வீடுவீடாய் குப்பை பொறுக்குவது சமம்!
தேவனுடைய பரிசுத்தவான் ஒருவர், புறங்கூறுகிறவர்களுக்கு “ஆவிக்குரிய குப்பை - பொறுக்கிகள்” என பெயர் சூட்டினார். இந்த உலகத்திலுள்ள குப்பை பொறுக்கிகளை நம் ஆண்டவர் அலட்சியப் படுத்துவதில்லை, அவர்களை மிகவும் மதிக்கிறார்! ஆனால் இந்த ஆவிக்குரிய குப்பை பொறுக்கிகளுக்கோ நமது ஆண்டவர் யாதொரு மதிப்பும் தருவதேயில்லை. தெருவில் நாம் காணும் குப்பை பொறுக்குபவர்கள், ஒரு வீட்டில் பொறுக்கும் குப்பைகளை அடுத்த வீட்டில் எறியமாட்டார்கள்... மொத்தமாய் ஓர் இடத்தில் சேர்த்து வைப்பார்கள்! ஆனால் ஆவிக்குரிய புறங்கூறும் குப்பை - பொறுக்கிகளோ, ஒரு வீட்டில் குப்பைகளைப் பொறுக்கி அடுத்த வீட்டில் கொட்டுவார்கள்! சிறிது நேரம் கழித்து இன்னொரு வீட்டில் கொட்டுவார்கள்! இவ்வாறு வீடுவீடாய் குப்பைகளைக் கொட்டிக் கொண்டே போவார்கள்!
யாதொரு மனந்திரும்புதலும், ஒப்புரவாகுதலும் இல்லாமல் தேவ பக்தியுள்ளவர்களை தீமைபேசும் புருஷர்கள்..... இன்று முதல், மனந்திரும்பி, தீமை பேசியதற்கு ஒப்புரவாகி, விழிப்புள்ள ஜீவியம் செய்திடக்கடவோம்! ஆமென்.
- ரத்னம்