அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
இந்த உலகத்தில் ஜனங்கள், உடல் ஊனமுற்றோருக்காக “கருணை இல்லம்” (Mercy Home) கட்டுகிறார்கள். கருணை இல்லம் என்ற பெயருக்கு இணையாய் “தகுதியுள்ளோர்க்கு அடைக்கல இல்லம்” (Home for the deserved) என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அதாவது, இவர்களுடைய இரக்கத்திற்கு, இதுபோன்ற ஏழை ஜனங்கள் மாத்திரமே தகுதியுடையவர்கள்! ஆனால், ஆண்டவருடைய இரக்கத்தை சுதந்தரித்த ஒரு மனிதன் “தகுதியில்லாதவர்கள் மீதும்” (Undeserved) இரக்கத்தை அல்லது கருணையை காட்டுவான்! காரியம் இப்படியாயிருக்க இவர்கள் மிக மோசமான பாவிகளாகிய விபச்சாரக்காரர்களிடத்திலும், குடிகாரர்களிடத்திலும், வீழ்ச்சியடையும் சகோதர சகோதரிகளிடத்திலும்..... இரக்கமுள்ளவர்களாகவே இருப்பார்கள் என்பது அதிக நிச்சயமல்லவா? இதுவே தேவ இரக்கத்தின் மெய்யான நிரூபணமாகும் (மத்.5:45).