அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘ஒரு விதவை’ தனக்கு யாரோ ‘எதிராளியாய்’ வந்த காரியத்தில் பலமுறை நியாயம் கேட்டும் அந்த நியாயாதிபதி, அவள் விண்ணப்பத்தை கேட்கவில்லை! ஆனால் அவளோ, சோர்ந்துபோகாமல் ‘அடிக்கடி’ அவனிடம் விண்ணப்பித்தாள்! “இவள் என்னிடம் அடிக்கடி வந்து அலட்டுகிறாளே” என தனக்குள் கூறி, அவளுடைய நியாயத்தை விசாரித்தான்! (லூக்.18:3-6). இதை இயேசு உவமையாய் குறிப்பிட்டு “தேவனும் அப்படியே தம்முடையவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அவர்களை நிச்சயமாய் விசாரித்து நியாயம் செய்வார்!” என கூறினார்! ஆம், சோர்ந்து போகாமல் ஜெபத்தில் காத்திருப்பதற்கு “விசுவாசம்” வேண்டும்! அந்த விசுவாசத்தை நம்மில் காண்பதற்கே ஆண்டவர் தாமதிக்கிறார்! ஆனால், ஆண்டவர் ‘பதில்’ கொண்டுவந்த நேரத்தில், அவர்கள் ‘சோர்ந்து’ ஜெபத்தை நிறுத்தி விட்டார்கள்! அதாவது, ஆண்டவர் அவர்களிடம் நீடிய பொறுமையான ‘விசுவாசத்தை’ காணமுடியாமல் வருந்தி, ஏமாற்றத்துடன் திரும்புகிறார்! (லூக்.18:7,8). ‘விசுவாசத்துடன்’ பொறுத்திருங்கள், நிச்சயமாய் பதிலளிப்பார்!